Total Pageviews

Tuesday 20 May 2014

தமிழ் மாநில அஞ்சல் - RMS இணைப்புக் 
குழுக் கூட்டம் 

தமிழ் மாநில அஞ்சல் -RMS  இணைப்புக் குழுவின் கூட்டம் கடந்த 17.05.2014 சனி மாலை  சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள RED  BUILDING  வளாகத்தில்  அதன் தலைவர் தோழர். K .  ராஜேந்திரன்(RMS  நான்கு ) அவர்கள் தலைமையில் கன்வீனர் தோழர். J . ராமமுர்த்தி (அஞ்சல் மூன்று) அவர்கள் துவக்கி வைக்க இனிதே நடைபெற்றது. 

கூட்டத்தில்  தமிழ் மாநில NFPE இன் உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள்  தோழர். S . ரவிச்சந்திரன், அஞ்சல் நான்கு, K . சங்கரன், RMS  மூன்று, B . சங்கர், ACCOUNTS , S . அப்பன்ராஜ், SBCO மற்றும் அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், கணக்குப் பிரிவின் தலைவர் தோழர். சந்தோஷ் குமார், அதன் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ்  உள்ளிட்ட   முக்கிய நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். GDS  மற்றும் நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர்கள் பணி  நிமித்தம் வெளியூர்களில் இருந்ததால் கலந்துகொள்ள முடிய வில்லை என்று தெரிவித்திருந்தனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட 
முக்கிய தீர்மானங்கள் :-

1. NFPE  சம்மேளனத்தில் வைர விழா  நிகழ்வை தமிழகத்தில் இணைப்புக்
    குழு சார்பாக சிறப்பாக நடத்துவது. 
     a ) சென்னையில் இந்த  விழாவை நடத்துவது.
     b ) எதிர்வரும் செப்டம்பர்  மாதம்   21 அல்லது 28 தேதிகளில் ஏதேனும் 
          ஒரு  தேதியில் இதனை நடத்துவது.
     c ) இதற்கான நிதித் தேவையை  NFPE  இன் அனைத்து உறுப்பு 
          சங்கங்களும் பகிர்ந்து அளிப்பது .
     d ) இதற்கென விழாக் கமிட்டி தனியே அமைப்பது.
     e ) தமிழக NFPE  இயக்கத்தில் பணியாற்றி ஓய்வு  பெற்ற அனைத்து 
          முன்னாள் , மாநிலச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள் ,
          சம்மேளன மற்றும்  அகில இந்திய சங்கங்களின் முன்னாள் 
          பொதுச் செயலர்கள் அனைவரையும் இந்த  நிகழ்வில் அழைத்து 
          அவர்களை கௌரவிப்பது .

2.  எதிர்வரும் 30.06.2014 அன்று அரசுப் பணி  நிறைவு பெரும் தமிழ் மாநில 
     அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். K . ராஜேந்திரன் 
     அவர்களுக்கு 29.06.2014 அன்று திருச்சியில் நடைபெறும் பாராட்டு 
      நிகழ்வில்  அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு 
      இணைப்புக்  குழு சார்பாக  அவர்களை கௌரவிப்பது.(இதற்கென 
      நிகழ்வில் தனி நேரம் ஒதுக்கப்படும் )

3.  மாநில கூட்டு ஆலோசனைக் குழுவுக்கான ஊழியர் பிரச்சினைகளை    
     அனைத்து மாநிலச் செயலர்களும் எதிர்வரும் 31.05.2014 க்குள் அதன் 
     செயலருக்கு அளிப்பது.

4. a )மாநில கணக்குப் பிரிவு ஊழியர்களுக்கு எதிராக  பழிவாங்கும்
        மற்றும் அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் GM  FINANCE
        நிர்வாகத்தை  கண்டித்து  எதிர்வரும் 20.05.20104 அன்று   மாநில 
       கணக்குப் பிரிவு அலுவலகத்திற்கு  முன்னால்  நடைபெறும் தார்ணா 
       போராட்டத்தில்  அனைத்து மாநிலச் செயலர்களும்  , நிர்வாகிகளும் 
        கலந்து கொண்டு முழு  ஆதரவினை அளிப்பது.
     b )சென்னை பெருநகர் பகுதியில் பணியாற்றும் அனைத்து 
        அமைப்புகளில்  இருந்தும் ஊழியர்களை பெருமளவில் கலந்து 
        கொள்ளச் செய்வது. 
     c ) அஞ்சல் -RMS  இணைப்புக் குழுவின் சார்பாக CPMG  இன் உடனடித் 
        தலையீடு வேண்டி பிரச்சினைகளை MEMORANDUM  ஆக அவரிடம் 
        அளித்துப் பேசுவது.
     d) இது குறித்து  அஞ்சல் -RMS  இணைப்புக் குழு சார்பாக தனியே 
        சுற்றறிக்கை வெளியிடுவது .
     d ) பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை என்றால்  இணைப்புக் குழு     
        சார்பாக  CPMG  அலுவலக வாயிலில் அனைத்து மாநிலச் 
        சங்கங்களும்  போராட்டத்தில் ஈடுபடுவது.

அன்புத் தோழர்களே ! 

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட முக்கிய  தீர்மானமான கணக்குப்  பிரிவு ( AUDIT  & ACCOUNTS ) ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்திட, எதிர்வரும் 20.05.2014 அன்று சென்னை  எழும்பூர் எத்திராஜ்  சாலையில் அமைந்துள்ள  GM  FINANCE  அலுவலக  வளாகத்தில்  நடத்தப் படும் தார்ணா  போராட்டத்தில், சென்னை பெருநகர் பகுதியில் பணி  புரியும் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS  மூன்று ,RMS  நான்கு , நிர்வாகப் பிரிவு , கணக்குப் பிரிவு, SBCO , GDS  உள்ளிட்ட பகுதிகளின் ஊழியர்கள்  பெருமளவில் கலந்துகொண்டு  போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்திட  தமிழ் மாநில அஞ்சல் -RMS  இணைப்புக் குழு  வேண்டுகிறது. 

கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு தனியே செய்தி அனுப்பப்படும் . இதற்கான சுற்றறிக்கை முன்னதாகவே இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப் படும்.

                                        தோழமை வாழ்த்துக்களுடன் 
                        அஞ்சல் - RMS  இணைப்புக் குழு,
                        தமிழ் மாநிலம்,  சென்னை 600 005  

Monday 12 May 2014

7TH CPC – POSTAL ASSISTANT AND ALLIED CADRES – SUGGESTIONS FOR MEMORANDUM CALLED FOR

The P3 CHQ is preparing a Memorandum for submission to 7thCPC. Services of Com. K. V. Sridharan, Ex-General Secretary is also being utilized. Suggestions for inclusion in the Memorandum are to be sent by e-mail to P3 CHQ before 19thMay 2014.



e-mail ID – aipeugrc@gmail.com

= M.KRISHNAN, GENL SEC.

Thursday 8 May 2014

7th CPC Questionnaire - Reply given by JCM National Council (Staff Side)

7th CPC Questionnaire - Reply given by JCM National Council (Staff Side)

No.NC-JCM-2014/ 7th CPC                                                               May, 2014


The Secretary,
7th Central Pay Commission,
New Delhi

Sub: - Reply to Questionnaire

Respected Madam,

We are enclosing herewith reply to Questionnaire on behalf of National Council(Staff Side) JCM for kind consideration of the Commission.

With regards,

Yours faithfully,

(Shiva Gopal Mishra)
Secretary

Thursday 1 May 2014